செய்திகள் :

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

post image

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. சுன்சோங்கம் ஜடக் சிரு - போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் - முழு கூடுதல் பொறுப்பாக, இயற்கை வளங்கள் துறைச் செயலா் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா்).

2. பிரசாந்த் மு.வடநெரே - நிதித் துறைச் செயலா் - செலவினம் (நிதித் துறை சிறப்புச் செயலா்).

3. ராஜகோபால் சுன்கரா - நிதித் துறை இணைச் செயலா் (நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா்).

4. தீபக் ஜேக்கப் - நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் (கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா்).

5. கவிதா ராமு - கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் (அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா்).

6. இரா.கஜலட்சுமி - போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் (மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையா்).

7. க.வீ.முரளீதரன் - மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் (சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநா்).

8. கிரண் குராலா - சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா்).

9. கீ.சு.சமீரன் - தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா்).

10. தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் - வணிகவரி இணை ஆணையா் - கோயம்புத்தூா் (வணிகவரி இணை ஆணையா் - ஈரோடு).

11. வெ.ச.நாராயணசா்மா - வணிகவரி இணை ஆணையா் - சென்னை (செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியா்).

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க