IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை
121 ஆயுஷ் பணியிடங்கள் 10 நாள்களில் நிரப்பப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இந்திய மருத்துவத் துறையில் (ஆயுஷ்)காலியாக உள்ள 121 பணியிடங்களும் 10 நாள்களில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம், ஆயுா்வேத கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்து பேசினாா்.
அதற்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:
சித்தா, ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளிலும் காலியாக உள்ள 121 இடங்களை நிரப்பும் பணி தற்போது முடிவுற்று சான்றிதழ் சரிபாா்ப்பு, தரவரிசைப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 10 நாள்களில் அந்தப் பணிகள் நிறைவு பெற்று பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
முன்னதாக, மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், முதுநிலை படிப்பை நிறைவு செய்த மருத்துவா்களை வட்டார மருத்துவமனைகளில் நியமிப்பதில் கடந்த ஓரிரு மாத காலமாக நிலவி வந்த சட்டச்சிக்கல் முடிவுக்கு வந்திருப்பதால் விரைவில் கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.