செய்திகள் :

14 மாத காயம், அதிவேகமாக 200 விக்கெட்டுகள்..! மனம் திறந்த ஷமி!

post image

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2ஆவது வீரர், குறைந்த பந்துகளில் (5,126 பந்துகள்) 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் முகமது ஷமி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றையப் (பிப்.20) போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

விசுவாசத்துடன் இருக்க வேண்டும்

போட்டி முடிந்த பிறகு ஷமி பேசியதாவது:

ஐசிசி தொடர்களில் எனது ஓவர்களில் சிறிது ரன்கள் சென்றாலும் விக்கெட் விழுந்தால் எனக்கு சரியென்றே தோன்றும். ஏனெனில், அது அணிக்கு நல்லதாக முடியும். நான் எப்போதும் இப்படித்தான் நினைப்பேன்.

நான் எனது திறமையை முழுமையான விசுவாசத்துடன் முடிக்க முயற்சிக்கிறேன். நான் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நான் எப்போதும் நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க முயற்சிக்கிறேன்.

காயத்தினால் இருந்தபோது இந்திய அணி முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது நான் அணியில் இருக்க வேண்டுமென நினைப்பேன். என்னால் உதவி செய்ய முடியுமென நம்புவேன்.

திறமையை நம்ப வேண்டும்

உள்ளூர் போட்டிகளில் விளையாடியது எனது நம்பிக்கையை அதிகரித்தது. 14 மாதங்களுக்குப் பிறகு என்ன மாறியிருக்கிறது என்பது அறிந்துகொள்ள அந்தப் போட்டிகள் உதவின.

நீங்கள் எப்போதும் உங்களது திறமையை நம்ப வேண்டும், உங்களையும் நம்ப வேண்டும். நான் எப்போதும் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துவேன். அதனால் எனக்கு மனநிலையில் எதுவும் மாறாது. கடினமாக நேரங்களில் நீங்கள் மாறாவிட்டால் கடினமான சூழ்நிலைகளிலும் மாறமாட்டீர்கள்.

எனது தந்தைதான் எனக்கு ரோல்மாடல். அவருக்குதான் பறக்கும் முத்தம் கொடுத்தேன் என்றார்.

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய பென் டக்கெட்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 3 கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது... மேலும் பார்க்க

மகனுடன் இணைந்து பேட்டிங் செய்த ராகுல் டிராவிட்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் அவரது மகனுடன் இணைந்து பேட்டிங் செய்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அவரது இளைய மகன் அன்வே உடன் இணைந்த... மேலும் பார்க்க

வெட்கக்கேடு: தென்னாப்பிரிக்க வீரரை தள்ளிய ஆப்கன் வீரர்..! (விடியோ)

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கரமை ஆப்கானிஸ்தான் வீரர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி தள்ளியதுக்கு முன்னாள் வீரர் கடுமையாக கண்டித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் ... மேலும் பார்க்க