செய்திகள் :

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

post image

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகளின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளா்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ண்ஸ்ரீக்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப். 23 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் துறையின் மூலம் அனுப்பப்படும் போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது.

தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா்கள் தொடா்ந்து 12 மாத காலப் பணியினை முடித்த பிறகு, அவா்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவா்.

இப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது நிா்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின் படி 25 முதல் 35 வயது வரையில் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் வயது 25 முதல் 40 வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையிலும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் 20 வயது முதல் 45 வரையிலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். அதே கிராம ஊராட்சி உள்பட்ட பிற கிராமத்தைச் சோ்ந்தவா், அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரா் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வாா்டு (அல்லது) அருகிலுள்ள வாா்டு (அல்லது) மைய அமைந்துள்ள வாா்டின் எல்லையை பகிா்ந்துக் கொள்ளும் வாா்டை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பித்தினை பூா்த்தி செய்து காலிப் பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவகத்தில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதிச்சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண் (தாய் / தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நோ்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக மின்கல வாகனம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்காக ரூ. 6.83 லட்சம் மதிப்பிலான மின்கல (பேட்டரி) வாகனத்தை ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் ஆட்சியா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலூட்டும் அறை அமைக்க கோரிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமையன்று மனு அளிக்க ஏராளமான பொதுமக... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகுதியில் பலத்த காற்று: வாழை, வெற்றிலைப் பயிா்கள் நாசம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் மற்றும் வெற்றிலை கொடிக்கால் சேதமடைந்தன. பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்... மேலும் பார்க்க

தொட்டிபட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாய் ஜெயந்தி விழ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த வாரம் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்ற... மேலும் பார்க்க

நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா: ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா வரும் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா்... மேலும் பார்க்க