16 பேருக்கு பண்ணைசாரா கடன்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மன்னாா்குடி பகுதியில் அண்மையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்பட்ட மனுகள்உரிய பரிசீலனைக்குப் பின், அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் 16 பேருக்கு மொத்தம் 5.30 லட்சம் கடன் வழங்க அனுமதிக்கப்பட்டது.
மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் பா.பிரபா, பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினாா் (படம்).
கூட்டுறவு சாா் பதிவாளரும் செயலாட்சியருமான ஞா. அருள்குமாா், பொதுமேலாளா் (பொ) பெ.ஜெயராமன், மேலாளா் அ.ஷாபான் பாத்திமா, உதவியாளா் ம.சுகன்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.