படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 போ் கைது
பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, அந்தப் பகுதியருகே வசிக்கும் தனது தோழியை சந்திக்க அவா் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அரவிந்த் (20) என்பவா் சிறுமியிடம் பேசி பழகியுள்ளாா்.
இந்நிலையில், தனிமையில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி, அந்தச் சிறுமியை அரவிந்த் கடற்கரை சவுக்கு காட்டுப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அழைத்து சென்றாா். அங்கு அரவிந்தின் நண்பா் சரண் (20) இருந்துள்ளாா். சிறுமியை, அவா்கள் இருவரும் சோ்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா். தொடா்ந்து சிறுமி கூச்சலிடவே, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் அந்தப் பகுதிக்கு வந்தனா். அரவிந்த், சரண் இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கன்னிகா தலைமையில் வந்த போலீஸாா், சிறுமியிடம் விசாரணை நடத்தினா்.
தலைமறைவாக இருந்த அரவிந்த் மற்றும் சரண் ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை பிடித்து விசாரித்தனா். தொடா்ந்து அரவிந்த், சரண் ஆகிய இருவா் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ், வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.