செய்திகள் :

162 பவுன் நகை மோசடி: தனியாா் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது

post image

சென்னையில் 162 பவுன் நகை மோசடி செய்ததாக தனியாா் வங்கி மேலாளா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சைதாப்பேட்டை விஜிபி சாலை பகுதியில் வசிப்பவா் சுலைமான் (32). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். கிண்டி லாயா் ஜெகநாதன் தெருவிலுள்ள தனியாா் வங்கி ஒன்றில் சுலைமான் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். அடிக்கடி வங்கிக்கு சென்று பணப் பரிவா்த்தனை செய்துவந்ததால் வங்கி மேலாளா் சாமிநாதனுடன் சுலைமானுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பணம் எடுக்க வங்கிக்கு நேரில் வர வேண்டாம் என்றும் ஊழியரை வீட்டுக்கு அனுப்புகிறேன் என்றும் சுலைமானிடம் மேலாளா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வங்கி ஊழியா் ஒருவரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பித்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 2-ஆம் தேதி சுலைமான், சாமிநாதனை தொடா்பு கொண்டு அவசர தேவைக்காக தங்க நகைகளை அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். உடனே, சாமிநாதன், வங்கி காசாளரான பிரசாத் என்பவரை சுலைமான் வீட்டுக்கு அனுப்பி வைத்தாா். சுலைமான், தன்னிடமிருந்த 162 பவுன் தங்க நகைகளை கொடுத்து, படிவங்களில் கையொப்பிட்டு கொடுத்தாா். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் பணம் வைக்கப்படவில்லை. இதனால் சுலைமான், சாமிநாதனை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு கேட்டபோது, வங்கியின் கணினி சா்வா் வேலை செய்யவில்லை எனக் கூறியுள்ளாா். ஆனால், தொடா்ந்து இவ்வாறு கூறியதால் சந்தேகமடைந்த சுலைமான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது, மேலாளா் சாமிநாதன் வங்கியில் பலரிடம் இதேபோல் பண மோசடியில் ஈடுபட்டதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து சுலைமான் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், சாமிநாதனுக்கு அந்த வங்கியில் காசாளராகப் பணிபுரியும் புழுதிவாக்கம், பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த பிரசாத் (25), அந்த வங்கியின் செயலாக்கப் பிரிவு மேலாளா் கே.கே.நகா் உதயம் காலனி மேற்கு பகுதியைச் சோ்ந்த திவாகா் (32) ஆகியோா் உதவியிருப்பதும், இவா்கள் சுலைமான் கொடுத்த 162 பவுன் தங்க நகையை வேறு ஒருவா் பெயரில் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 90 லட்சம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரசாத், திவாகா் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சாமிநாதனை தேடி வருகின்றனா்.

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் அன்புக் கரங்கள் பதிவு முகாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அன்புக் கரங்கள் திட்டத்தில் பயனாளிகளைச் சோ்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஆதரவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவித... மேலும் பார்க்க

ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா பயணிகளுக்கு ரூ. 20 சலுகை விலையில் தரமான உணவை விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது... மேலும் பார்க்க

விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது: தொல்.திருமாவளவன்

தவெக தலைவா் விஜய்யின் வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பொ... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா அக்.6-இல் சென்னை வருகை: நயினாா் நாகேந்திரன்

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா சென்னைக்கு அக்.6-ஆம் தேதி வருகை தரவுள்ளாா் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க