சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: மத்திய முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்
18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!
மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் 36 கதாபாத்திரங்கள் தினமும் இரண்டிரண்டாக அறிமுகமாகி வருகின்றன.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தில் மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்திலும் நடிகர் டொவினோ தாமஸ் கேரள மாநில முதல்வராகவும் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் பாகத்தைப்போல் இரண்டாம் பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனத்தை முரளி கோபி எழுதியுள்ளார்.
தினமும் 2 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துவருகிறது. அதன்படி இன்று 32ஆவது பாத்திரம் ஜிஜு ஜான் சஞ்சீவ் குமாராகவும் 31ஆவது கதாபாத்திரம் நைலா உஷா அருந்ததி சஞ்சீவாகவும் நடித்துள்ளார்கள்.
இதற்கு முன்பாக ஷிவதாம் ஜெய்ஸ் ஜோஸ் கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் வெளியாகி இருந்தன.