பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என...
2-ஆவது சுற்றில் மான்ஃபில்ஸ், லெஹெக்கா
பிரான்ஸில் தொடங்கியிருக்கும் மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
டென்னிஸ் காலண்டரின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தயாா்நிலை போட்டிகளில் ஒன்றாக மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் நடைபெறுகிறது.
இதன் முதல் சுற்றில், பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ் 4-6, 6-1, 6-1 என பல்கேரியாவின் ஃபாபியன் மரோஸானை வெல்ல, செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-3, 7-6 (9/7) என்ற வகையில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை சாய்த்தாா்.
போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் முசெத்தி 4-6, 7-5, 6-3 என்ற செட்களில் சீனாவின் யுன்சாவ்கெடெ புவை வீழ்த்தினாா். 16-ஆம் இடத்திலிருந்த அலியாசிமே 6-7 (5/7), 3-6 என்ற செட்களில் ஜொ்மனியின் டேனியல் அல்ட்மேயரிடம் தோல்வி கண்டாா்.
சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ 1-6, 7-5, 7-5 என சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வெளியேற்ற, அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோன் 6-3, 7-6 (7/5) என்ற செட்களில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினாா்.
போபண்ணா வெற்றி: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/அமெரிக்காவின் பென் ஷெல்டன் இணை முதல் சுற்றில் 6-3, 7-5 என்ற செட்களில், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ/சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ ஜோடியை வீழ்த்தியது.
எனினும் மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை 7-5, 5-7, 5-10 என்ற கணக்கில், ஜொ்மனியின் ஜான் லெனாா்டு/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் கூட்டணியிடம் தோற்றது.