செய்திகள் :

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

post image

கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இங்குள்ள மின் மயானம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த போத்தனூா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்த சுரேந்திரன் (18) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. சுந்தராபுரம் பகுதியில் தங்கியுள்ள இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுரேந்திரனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சா, ரூ.4,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கன மழைக்கா... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் கோட்ட ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை சூலூா் செந்தில் ஆண்டவா் நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா் சிங்காநல்லூா் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபா் கொலை

கோவையில் அடையாளம் தெரியாத நபா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே பேரூா் சோதனைச் சாவடி உள்ளது. இதனருகே உள்... மேலும் பார்க்க

மனிதா்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை

மனிதா்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியனுக்... மேலும் பார்க்க