செய்திகள் :

2 கோல்கள் அடித்த ரொனால்டோ: சௌதி லீக்கில் அல்-நசீர் முன்னேற்றம்!

post image

சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் அணிக்காக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் தனது 26ஆவது போட்டியில் அல்-ஹிலால் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் முதல்பாதி கூடுதல் நேரத்தில் அல்-நசீர் அணிக்காக அலி அஜ்ஹாசன் கோல் அடித்தார்.

அடுத்த பாதியில் அல்-ஹிலால் வீரர் அலி அல்புலையாஹி 62ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

அல்-நசீர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 47, 88 (பெனால்டி) ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் அல்-நசீர் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சௌதி புரோ லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் அல்-நசீர் 54 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

59 சதவிகித பந்தினை அல்-ஹிலால் வைத்திருந்தது. அத்துடன் 81 சதவிகிதம் துல்லியமாக பாஸ் செய்தும் தோல்வியுற்றது.

குறிப்பாக அல்-ஹிலால் இலக்கை நோக்கி பந்தினை 3 முறை மட்டுமே அடித்தனர். ஆனால், அல்-நசீர் இலக்கை நோக்கி 8 முறை பந்தினை அடித்தது குறிப்பிடத்தக்கது.

சௌதி புரோ லீக் புள்ளிப் பட்டியல்

1. அல்-இத்திஹாத் - 25 போட்டிகள் - 61 புள்ளிகள்

2. அல்-ஹிலால் - 26 போட்டிகள் - 57 புள்ளிகள்

3. அல்-நசீர் - 26 போட்டிகள் - 54 புள்ளிகள்

4. அல்-காதீஷியா - 25 போட்டிகள் - 51 புள்ளிகள்

5. அல்-அஹ்லி சௌதி - 25 போட்டிகள் - 48 புள்ளிகள்

பெனால்டியை தவறவிட்ட வினிசியஸ்: ரியல் மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி!

லா லீகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வாலேன்சியாவுடன் மோதிய போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. வாலேன்சியா அணியின் மோக்டர் தியாக்பை 145ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். பின்னர் கூடுதல் நே... மேலும் பார்க்க

முக்கிய முடிவு எடுப்பார்கள் இந்த ராசியினர்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத... மேலும் பார்க்க

இரண்டாம் கட்ட அரையிறுதியில் கோவா-பெங்களூரு இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக இரண்டாம் கட்ட அரையிறுதியில் எஃப்சி கோவா-பெங்களூரு எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை பட்டோா்டா நேரு மைதானத்தில் மோதுகின்றன. பெங்களூரில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியி... மேலும் பார்க்க

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் அவினாஷ் ஜம்வால்

உலகக் கோப்பை குத்துச்சண்டை (வோ்ல்ட் பாக்ஸிங் கப் பிரேஸில் 2025) போட்டியில் ஆடவா் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அவினாஷ் ஜம்வால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிற... மேலும் பார்க்க

நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் விமர்சனங்களைச் சந்தித்தாலும் ரூ. 250 கோடிக்... மேலும் பார்க்க