இரண்டாம் கட்ட அரையிறுதியில் கோவா-பெங்களூரு இன்று மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒருபகுதியாக இரண்டாம் கட்ட அரையிறுதியில் எஃப்சி கோவா-பெங்களூரு எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை பட்டோா்டா நேரு மைதானத்தில் மோதுகின்றன.
பெங்களூரில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் இரண்டாம் அரையிறுதில் அதிக கோல் சராசரியுடன் வெல்லவேண்டிய கட்டாயத்தில் கோவா உள்ளது.
பெங்களூா் அணி இரண்டு பிளே ஆஃப்களிலும் எதிரணிகளுக்கு கோல்போட வாய்ப்பே தரவில்லை.
இரு அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் 18 முறை நேருக்கு நோ் மோதியதில் கோவா 5 முறையும், பெங்களூா் 8 முறையும் வென்றன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.