இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மாட் ஹென்றி, ஸகாரி ஃபோல்க்ஸ் அசத்தல்
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, டஃபாட்ஸ்வா சிகா 33 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஸகாரி ஃபோல்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
Another 5-wicket haul for Matt Henry (5-40) in Bulawayo!
— BLACKCAPS (@BLACKCAPS) August 7, 2025
Four wickets for debutant Zak Foulkes (4-38) and a maiden Test wicket for debutant Matt Fisher (1-16).
Stream LIVE and free in NZ on ThreeNow Live scoring | https://t.co/DnWSGE9t8b#ZIMvNZ#CricketNation = Zimbabwe… pic.twitter.com/GtWL6nDTvK
நியூசிலாந்து அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?
Zimbabwe, who played first in the second Test against New Zealand, were bowled out for 125 runs in their first innings.