சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
20 கிலோ எடையைக் குறைத்த ஆண்டனி வர்கீஸ்!
நடிகர் ஆண்டனி வர்கீஸ் தன் உடல் எடையைக் குறைத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பெபே (pepe) என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் ஆண்டனி வர்கீஸ். அங்கமாலி டயரிஸ், அஜகதந்திரம், ஆர்டிஎக்ஸ் படங்களில் நடித்து கவனம்பெற்றவர் இறுதியாக கொண்டல் மற்றும் தாவீத் (deveed) ஆகிய படங்களில் நடித்தார்.
குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான தாவீத் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதையும் படிக்க: தேர்வில் கதை எழுத வேண்டாமென்ற ஆசிரியர்..! தொழிலாக மாற்றிய பிரதீப்!
இந்த நிலையில், தாவீத் படத்திற்காக 96 கிலோ உடல் எடையிலிருந்து 74 கிலோவரை குறைத்ததாக ஆண்டனி வர்கீஸ் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.