செய்திகள் :

2024-ல் இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல்: மத்திய அரசு தகவல்

post image

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 294 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியாநந்த் ராய் பஞ்சப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லையில் கடந்த ஓராண்டில் (2024) மட்டும் 294 டிரோன்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், எல்லையைக் கடந்து டிரோன் மூலம் மேற்கொள்ளப்படும் கடத்தல்களை தடுப்பதற்காக பஞ்சாப் எல்லையில் டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

மேலும், டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அலுவகம், இந்திய விமானப் படை மற்றும் அப்பகுதியின் காவல் துறை ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதனைத் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் வரும் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்களின் வழித்தடத்தை கண்டறியவும் கடத்தல்காரர்களை பிடிக்கவும் எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவை இரவு பகலாக முழு வீச்சில் செயல்பட்டுவருவதாகவும் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்து... மேலும் பார்க்க

2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு மு... மேலும் பார்க்க

உ.பி: பசு வதை வழக்கில் குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக பசு வதை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நபரை காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர். சாஹரன்பூர் மாவட்டத்தின் தில்பாரா பகுதியில் நேற்று (மார்ச் 17) இரவு நானோட்டா காவல்... மேலும் பார்க்க

டென்மார்க் பயணித்த சிறிய விமானம் சுவிட்சர்லாந்தில் விபத்து! 3 பயணிகள் பலி?

டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா ஈஏ-400 எனும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் 13 அன்று சுவிட்சர்லாந்து ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் காவலர் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேற்கு சிங்பம் மாவட்டத்தின் ராதா போதா கிராமத்தின் வனப்பகுதியில் நக்சல... மேலும் பார்க்க