கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை... தேனியில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி ...
டென்மார்க் பயணித்த சிறிய விமானம் சுவிட்சர்லாந்தில் விபத்து! 3 பயணிகள் பலி?
டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த எக்ஸ்ட்ரா ஈஏ-400 எனும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மார்ச் 13 அன்று சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வந்தடைந்தது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 17) மாலை 5.20 மணியளவில் மீண்டும் டென்மார்க் செல்வதற்காக சேம்டன் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட போது தென்கிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:தெற்கு ஸ்பெயினில் கடும் வெள்ளம்! நிரம்பிய நீர்நிலைகள்...மக்கள் வெளியேற்றம்!
இதனைத் தொடர்ந்து, புறப்பட்ட 2 நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்து அந்த விமானம் முழுவதுமாக எரிந்து சாம்பலானதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ள நிலையில் அதில் பயணித்த 3 பேரும் பலியாகியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இந்த விமானத்தில் பயணித்தவர்களை முறையாக அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.