செய்திகள் :

போதைத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது!

post image

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களைத் தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேட்டயத்தின் மரங்காட்டுப்பள்ளி எனும் கிராமத்தில் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மரங்காட்டுப்பள்ளி போலீஸார் நேற்று (மார்ச் 20) இரவு 7 மணி அளவில் அக்கிராமத்தின் வயலா வெல்லாக்கல் எனும் பகுதியில் சோதனை செய்துள்ளனர்.

இதையும் படிக்க: கர்நாடகம்: 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி இடைநீக்கம்!

அப்போது, அப்பகுதியில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல் அந்த காவலர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மஹேஷ், சரத் மற்றும் ஷியாம் குமார் ஆகிய மூன்று காவலர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, நிலைமை மோசமடைந்ததினால் கூடுதல் காவலர்கள் அங்கு அனுப்பப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா: படகு கவிழ்ந்து ஆஸ்திரேலியப் பெண் பலி! 2 பேர் படுகாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவின் அருகே சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள துறைமுகத்திலிருந்து நுஸா பென... மேலும் பார்க்க

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000 தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அகதிகள் திட்டத்தில் இணைய 67,000க்கும் மேற்பட்ட தென் ஆப்பிரிக்கர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப்பின் புதிய திட்டத்தின் மூலம் அகதிகளாக அமெரிக்காவில் குடியேற வி... மேலும் பார்க்க

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்கக் கோரும் நேபாளம்!

இந்தியாவிடம் மின் விநியோகத்தை அதிகரிக்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 10 முதல் இன்று (மார்ச் 21) வரை பயணம் மேற்கொண்ட நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் அர்சூ ரானா டியூப... மேலும் பார்க்க

8 லட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்!

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டி... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளி... மேலும் பார்க்க