KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!
இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (மார்ச் 20) நள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 21) காலைக்குள் அந்த எரிமலை மொத்தம் மூன்று முறை வெடித்து அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் படலம் பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது எந்தவொரு வெடிப்புமின்றி அமைதியாகக் காணப்படும் அந்த எரிமலையை தீவிரமாக இந்தோனேசியா அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், அந்த எரிமலை இருக்கும் மாகாணத்தில் கடந்த சில காலமாக நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் கடந்த 7 நாள்களாக அந்த எரிமலையின் செயல்பாடுகள் அதிகரித்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் எரிமலை வெடிப்பிற்கு உச்சக்கட்ட எச்சரிக்கைகளை அறிவித்து அப்பகுதியின் அபாய மணடலத்தை 7 கிலோ மீட்டரிலிருந்து 8 கி.மீ. ஆக உயர்த்தியுள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பினால், ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், அத்தீவிற்கான பிற சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாகியுள்ளது.
முன்னதாக, கடந்த 2024 நவம்பர் மாதம் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில் 9 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.