செய்திகள் :

‘2025’ - பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

post image

புது தில்லி: நிகழாண்டை ‘சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக’ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முப்படைகளுக்கும் இடையே பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முப்படைகளுக்குமான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டை அமைப்பதே இந்த கருத்தின் குறிக்கோளாகும்.

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குவதில் ‘சீர்திருத்தங்களுக்கான ஆண்டு’ குறிப்பிடத்தக்க நகர்வாக அமையுமென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

21-ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கிடையே நாட்டின் பாதுகாப்பையும் ஒருங்கிணைப்பையும் உறுதிசெய்ய, பாதுகாப்புத் துறையை தயார்படுத்துதலுக்கு அடித்தளமாக இந்த நடவடிக்கை அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025-ஆம் ஆண்டை சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக கடைப்பிடிப்பது என்ற தீர்மானம் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பாதுகாப்புப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பாடு அடையச் செய்வதிலும் பல்முனை ஒருங்கிணைந்த செயல் திட்டங்களுக்கு ஆயத்தமாக இருக்கச் செய்ய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் இணையவழி(சைபர்), விண்வெளி, செயற்கை நுண்ணறிவு மற்றும் அது சார்ந்த இயந்திர ஆய்வுகள்(மெஷின் லேர்னிங்) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், ஹைப்பர்சோனிக், ரோபோடிக்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: இது காங்கிரஸின் வாக்குறுதி!

தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக பியாரி திதி யோஜனா திட்டத்தை அறிவித்துள்ளது. தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெ... மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் பாதிப்புக்கும் சீனாவுக்கும் தொடர்பில்லையா? சுகாதாரத் துறை

சீனாவில், மனிதர்களைத் தாக்கும் மெடாநியூமோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட... மேலும் பார்க்க

சண்டீகரில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

சண்டீகரில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. சண்டீகரின் செக்டார்-17ல் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது. ... மேலும் பார்க்க

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று!

பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண்டு குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று உள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

திரிபுராவில் பிப்ரவரிக்குள் மின்சார ரயில்கள் இயக்கப்படும்!

வடகிழக்கு மாநிலத்தில் முக்கிய மின்மயமாக்கல் திட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்து‘க்குள் திரிபுராவில் மின்சாரம் மூலம் இயங்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மா... மேலும் பார்க்க

பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கள்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெர... மேலும் பார்க்க