செய்திகள் :

2025-26ல் புதிதாக 12,000 பேருக்கு வேலை: விப்ரோ அறிவிப்பு

post image

2025-26 நிதியாண்டில் புதிதாக 12,000 பேரை பணியில் சேர்க்கவிருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான விப்ரோ வரும் ஆண்டில் 10,000-க்கும் அதிகமான புதிய பணியாளர்களை நியமிக்க உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சவுரப் கௌவில் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் மூலம் பணியமர்த்தப்படுவோர் எண்ணிக்கை 10,000- 12,000 என்ற அளவில் இருக்கும். நடப்பு நிதியாண்டின் 3 காலாண்டிலும் புதிதாக 7,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4-வது காலாண்டில் மேலும் 2,500 -3,000 பேர் பணியமர்த்தப்படுவர்.

இதையும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி

மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனம் 24.5% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அடுத்த காலாண்டில் கூடுதல் வருவாயை எதிர்பார்ப்பதாகவும் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் சுமார் 20,000 பேரை புதிதாக பணியமர்த்தவிருக்கிறது.

இதையும் படிக்க | டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!

ஐடி, தனியார் வங்கிகளால் சென்செக்ஸ் 750 புள்ளிகளை இழந்தது! நிஃப்டி 23,150!!

வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை காலை வணிகம் தொடங்கியதுமே, இந்தியப் பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கமே நிலவியது.தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் காரணமாக, சென்செக்ஸ... மேலும் பார்க்க

தை பிறந்துவிட்டது: இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், தை மாதம் மூன்றாம் தேதியான காணும் பொங்கலன்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று காலை வணிகம் தொடங... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்வு! ரூ. 86.40

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 15) 13 காசுகள் உயர்ந்து ரூ. 86.40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வணிக நேர முடிவில் 17 காசுகள் சரிந்து ரூ. 86.53 காசுகளாக இருந்த நிலையில், ... மேலும் பார்க்க

2வது நாளாக உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை!

பங்குச் சந்தை வணிகம் இரண்டாவது நாளாக இன்று (ஜன. 15) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தன. ரியாலிடி மற்றும் ஐடி துறை பங்குகள் உயர்வுடன் காண... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிந்தது.தரவுகளின் அடிப்படையில் மேக்ரோ பொருளாதார எண்கள் வெளியிடப்பட்ட பிறகு உள்நாட்டு பங... மேலும் பார்க்க

பணவீக்கம் தளர்வு, வங்கி, எரிசக்தி பங்குகள் கொள்முதல் ஆகியவற்றால் மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: சில்லறை பணவீக்கம் குறைந்து வருவதாலும், உலகளாவிய சந்தைகள் மீண்டு வருவதால் கடந்த 4 நாட்களாக சரிந்த இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று மீண்டெழுந்தது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் ... மேலும் பார்க்க