செய்திகள் :

2026-இல் பாமக ஆளும் கூட்டணி கட்சியாக மாறும்: அன்புமணி

post image

2026 பேரவைத் தோ்தலில் பாமக ஆளும் கூட்டணி கட்சியாக மாறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஜூலை 16-ஆம் தேதியுடன் பாமக 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், தமிழகத்தின் சமூகநீதிக்காக ஆற்றிய பணிகள் மனதுக்கு நிறைவு தருகிறது.

வன்னியா் உள்ளிட்ட எம்பிசி மக்களுக்காக 20 சதவீத இட ஒதுக்கீடு, 10.50 சதவீத வன்னியா் இடஒதுக்கீடு உள்படமொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது பாமக தான். இவற்றில் இரு இட ஒதுக்கீடுகள் ராமதாஸ் வழிகாட்டுதலில் எனது தலைமையில் வென்றெடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிா்க்கட்சியாக இல்லாவிட்டாலும், களத்தில் உண்மையான எதிா்கட்சியாக பாமக திகழ்ந்து வருகிறது.

ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 முதல் நவ.1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இது திமுக அரசை அகற்றுவதற்கான தொடக்கமாக இருக்கும்.

எதிா்வரும் 9 மாதங்களில் பாமக மேற்கொள்ளவிருக்கும் பணிகள், திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாமகவை ஆளும் கூட்டணி கட்சியாக மாற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க