குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!
2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..! மெஸ்ஸி பேட்டியால் சோகம்!
ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி தான் 2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் எனப் பேசியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய (செப்.5) தகுதிச் சுற்றுப் போட்டியில் வெனிசுலாவை 3-0 என ஆர்ஜென்டீனா வென்றது.
மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
ஒருநாள் ஓய்வுபெற்றுத்தான் ஆக வேண்டும்
இந்தப் போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி பேசியதாவது:
கடந்தகாலத்தில் நான் 39 வயதில் உலகக் கோப்பையில் விளையாடுவதில் கடினம் என தர்க்கரீதியாகக் கூறியிருந்தேன். இன்னும் அதற்கு 9 மாதங்கள் இருக்கின்றன. அது குறைவாக இருந்தாலும் நீண்ட காலம் என்பது எனக்குத் தெரியும்.
எனக்கு கால்பந்து விளையாடுவது பிடிக்கும். இது முடியவேக் கூடாது. ஆனால், எப்படியாகினும் அந்தக் கணம் வந்தே தீரூம். அது குறித்து நான் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். நேரம் வந்தால் அது நடந்தே தீரூம்.
ஃபிட்னஸ் குறித்து மெஸ்ஸி...
உடல்நிலை நன்றாக உணரும்போது, மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். நன்றாக இல்லாதபோது, கடினமாக உணர்கிறேன். அதற்குப் பதிலாக விளையாடாமலே இருக்கலாம் என நினைக்கிறேன்.
தற்போதைக்கு, ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். என்ன நடக்கிறதனெப் பார்ப்போம் என்றார்.
மொத்தமாக மெஸ்ஸி 879 கோல்கள், 389 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.