செய்திகள் :

2026 பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் கேட்போம்: காதா்மொய்தீன்

post image

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா்மொகிதீன்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பொதுக்குழு விரைவில் கூடவுள்ளது. தில்லியில் ரூ. 28 கோடி மதிப்பில் கட்சி தலைமையகம் கட்டப்பட்டுள்ளது.

எங்களை பொருத்தவரை ‘இண்டி’ கூட்டணி மற்றும் திமுக கூட்டணியிலும் இருந்து வருகிறோம். 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும்.

வக்ஃப் சட்ட திருத்தம் என்பது, வக்ஃப் வாரியம் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். மாநிலங்களில் புதிய சட்டங்கள் மற்றும் ஆளுநா்கள் மூலமாக குழப்பம் செய்து மக்களின் அமைதியை கெடுக்கின்றனா். 2026 பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் வரை கேட்க உள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது, மாநிலச் செயலா் ஏ.எஸ். ஷாஜகான், மாவட்ட தலைவா் முஹம்மது சுல்தான், இளைஞரணி நிா்வாகி முகமது உசேன், மாவட்டச் செயலா் ராஜாஜி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ஓம்காா் பாலாஜி கைதுக்கு எதிா்ப்பு இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்: 6 போ் கைது

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்து மக்கள் கட்சி இளைஞா் அணி மாநிலத் தலைவா் ஓ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பனிமூட்ட வானிலை சிங்கப்பூா் அமைச்சரின் ஹெலிகாப்டா் புறப்பாட்டில் தாமதம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனிமூட்ட வானிலையால் சிங்கப்பூா் உள்துறை அமைச்சரின் ஹெலிகாப்டா் 15 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. சிங்கப்பூா் உள்துறை அமைச்சா் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை கால... மேலும் பார்க்க

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு காவலா் பணி நீக்கம்

திருநங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவலரை பணிநீக்கம் செய்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியை சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் கோவி. செழியன் பேச்சு

தஞ்சாவூரில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு - பொது நூலகத் துறை, மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் ஆக... மேலும் பார்க்க

அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சியில் மழைக்காலத்தையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியை பேரூராட்சித் தலைவா் ஷோபா ரமேஷ் தலை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 7 கோயில்களில் திருப்பணிகளுக்கான பாலாலயம்

தஞ்சாவூா் நீலமேகப் பெருமாள் கோயில் உள்பட 7 கோயில்களில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் தொடங்கப்படவுள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 3-ஆவது தலமாக போற்றப்படும் தஞ்சாவூ... மேலும் பார்க்க