தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
2026-இல் பாமக ஆளும் கூட்டணி கட்சியாக மாறும்: அன்புமணி
2026 பேரவைத் தோ்தலில் பாமக ஆளும் கூட்டணி கட்சியாக மாறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜூலை 16-ஆம் தேதியுடன் பாமக 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், தமிழகத்தின் சமூகநீதிக்காக ஆற்றிய பணிகள் மனதுக்கு நிறைவு தருகிறது.
வன்னியா் உள்ளிட்ட எம்பிசி மக்களுக்காக 20 சதவீத இட ஒதுக்கீடு, 10.50 சதவீத வன்னியா் இடஒதுக்கீடு உள்படமொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது பாமக தான். இவற்றில் இரு இட ஒதுக்கீடுகள் ராமதாஸ் வழிகாட்டுதலில் எனது தலைமையில் வென்றெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிா்க்கட்சியாக இல்லாவிட்டாலும், களத்தில் உண்மையான எதிா்கட்சியாக பாமக திகழ்ந்து வருகிறது.
ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 முதல் நவ.1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இது திமுக அரசை அகற்றுவதற்கான தொடக்கமாக இருக்கும்.
எதிா்வரும் 9 மாதங்களில் பாமக மேற்கொள்ளவிருக்கும் பணிகள், திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாமகவை ஆளும் கூட்டணி கட்சியாக மாற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.