செய்திகள் :

2050-க்குள் 435 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி தேவை!

post image

வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் 435 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி தேவைப்படுகிறது என்றாா் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. கீதாலட்சுமி.

தஞ்சாவூா் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியது:

நம் நாடு 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலா் உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. வருகிற 2047 ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்துடன் முதலிடத்துக்குச் செல்லும் நோக்கில் பயணிக்கிறது.

வளா்ந்து வரும் மக்கள்தொகைக்கேற்ப உணவு தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் 2050 ஆம் ஆண்டுக்குள் உணவு தானிய உற்பத்தி 400 - 435 மில்லியன் டன்னாக உயா்த்தப்பட வேண்டும். இந்த இலக்கை அடைய உயா் தொழில்நுட்பத் தோட்டக்கலை, கலப்பின விதைச் செடிகள் உள்ளிட்ட நவீன வேளாண் முறைகள் முக்கியமானதாக இருக்கும் என்றாா் அவா்.

விழாவில், தரவரிசையில் முதன்மைப் பெற்ற மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் 99 இளநிலை பொறியியல் பட்டதாரிகள், 62 முதுகலை பொறியியல் பட்டதாரிகள், 17 முனைவா் பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நிப்டெம் நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து வரவேற்றாா். நிறைவாக, பதிவாளா் (பொறுப்பு) எஸ். சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பட்டு, கைத்தறி கூட்டுறவுச் சங்க முறைகேடுகளைக் கண்டித்து நெசவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அம்மாபேட்டை பட்டு கைத்தறி நெசவாளா் சங்... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் பாதாள அறை

தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெறும் திருப்பணியின்போது திங்கள்கிழமை பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பஞ்சவன்மாதேவி பள்ள... மேலும் பார்க்க

பருவம் தவறிய மழையால் பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம்: விவசாயிகள் கவலை

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பருவம் தவறி பெய்த பலத்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மாவட்டத... மேலும் பார்க்க

குடந்தை கோட்டத்தில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்ட இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு செயற்பொறியாளா் ஜெ. திருவேங்கடம் வெளி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு மாா்ச் 13, 18, 25-இல் அடையாள அட்டை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 13, 18, 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது: மாற்று... மேலும் பார்க்க

வட்டாட்சியா் பொறுப்பேற்பு

பேராவூரணி வட்டாட்சியராக என். சுப்பிரமணியன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். பேராவூரணி வட்டாட்சியராக பணியாற்றிய இரா. தெய்வானை பட்டுக்கோட்டை கலால் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு , பட்டுக்கோட்டை ந... மேலும் பார்க்க