செய்திகள் :

25 கோடி ரூபாய் மதிப்பில் தேநீர் பாத்திரம் - உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக இருப்பது ஏன்?

post image

ஒரு தேநீர் பாத்திரம், பல ஆடம்பர கார்களை விட மதிப்பு மிக்கதாக இருக்க முடியுமா? “தி ஈகோயிஸ்ட்” என்ற இந்த தேநீர் பாத்திரம், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 25 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான தேநீர் பாத்திரத்தை இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் புல்வியோ ஸ்காவியா உருவாக்கியிருக்கிறார்.

இந்த பாத்திரம் 18 காரட் மஞ்சள் தங்கத்தால் ஆன அடித்தளத்தையும், தங்க முலாம் பூசப்பட்ட உண்மையான வெள்ளியையும் கொண்டுள்ளது.

இதன் வெளிப்புறம் வைரங்களாலும், தாய்லாந்து மற்றும் பர்மாவிலிருந்து பெறப்பட்ட 386 ரூபி கற்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த தேநீர் பாத்திரத்தின் கைப்பிடி யானை தந்தத்தால் ஆனது. இது மிகவும் நுட்பமாகவும், கவனமாகவும் கையாளப்பட வேண்டிய ஒரு பொருளாகும் என்று கின்னஸ் உலக சாதனை இணையதளம் குறிப்பிடுகிறது.

தி ஈகோயிஸ்ட்” தேநீர் பாத்திரம் தற்போது இங்கிலாந்தில் உள்ள என். சேதியா அறக்கட்டளையின் சித்ரா சேகரிப்பில் (Chitra Collection) பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாத்திரம், தேநீரின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.2.96 கோடி ஓய்வு பணம்; மனைவியை தவிர்த்து தனியே வாழ்ந்த நபர் - கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

ஓய்வுக்காலத்தில் தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ முடிவு செய்த ஒரு ஜப்பானிய ஆணின் கதை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த டெட்சு யமடா என்பவர் தனது 60 வயதில் ஓய்வு பெற்றிருக்கிறார... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு இந்தியர்!

இந்தியாவை சேர்ந்த பரிசிட் பலூசி என்பவர் துபாயில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். அவர் மும்பையில் வந்து இறங்க... மேலும் பார்க்க

"என்னை ஏன் திருமணம் செய்தாய்?" - வைரலாகும் அமெரிக்க பெண்ணின் கேள்வியும், இந்தியரின் பதிலும்!

இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க மனைவியிடம், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.அந்த வீடியோவில் வரும் கணவன் மனைவியின் பெயர் அனிக... மேலும் பார்க்க

உ.பி: சட்டமன்ற வளாகத்தில் இடையூறாக நின்ற அமைச்சர் கார் - கிரேன் மூலம் அப்புறப்படுத்திய போலீஸார்!

உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்திற்குள் அமைச்சர் சஞ்சய் நிஷாத் தனது காரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அவர் காரை வழக்கமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த... மேலும் பார்க்க

`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட் ஸ்பாட் டு என்ஜாய்

களக்காடு - தலையணை அருவிஅடிக்கிற வெயிலுக்கு உடம்பு சூட்டை தணிக்க திருநெல்வேலி மக்கள் எப்போதும் எதிர்பார்க்கிறது குற்றாலம் சீசன் தான்.ஆனா எல்லா சீசன்லயும் தண்ணி, சும்மா அடிச்சிட்டு வரணும்னா அதுக்கான ஒரே... மேலும் பார்க்க

Jessica Radcliffe: திமிங்கலம் பெண் பயிற்சியாளரை தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றதா? - உண்மை என்ன?

பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோவில் "ஜெசிகா ராட்கிளிஃப்" என்ற பெண் பயிற்சியாளரை திமிங்கலம் திடீரென மேலே பாய்ந்து நீருக்குள் இழுத்துச் செல்கிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த ப... மேலும் பார்க்க