செய்திகள் :

25 டன் ரேஷன் அரிசியுடன் மாயமான லாரி... தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டிரைவர்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். சொந்தமாக லாரி வைத்துள்ள சுரேஷ், அவரே அந்த லாரியை ஓட்டியும் வந்துள்ளார். இவர் கடந்த 16-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் இருந்து ரேசன் கடைகளுக்கு வினியோகிக்கப்படும் 25 டன் ரேசன் அரிசியை தனது லாரியில் ஏற்றி கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள அரசு குடோனுக்கு கொண்டு செல்வதற்காக வந்துள்ளார். மார்த்தாண்டம் வரை வந்த லாரி குறித்து அதன் பின்னர் என்ன ஆனது என தெரியவில்லை. ரேஷன் அரிசியுடன் பாதி வழியிலேயே மாயமான லாரி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுக்கடை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியுடன் சென்ற லாரியையும், லாரி டிரைவர் சுரேசையும் தேடி வந்தனர்.

crime

இந்த நிலையில் இன்று காலை நடைக்காவு அருகே வடக்கேதோப்பு பகுதியில் சிஜோ என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் உள்ளதாக கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த அந்த வீட்டின் மேல்தளத்தின் படிக்கட்டு கம்பியில் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் ஒருவர் நிற்பதை அங்கு வேலைக்கு வந்த தொழிலாளர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

கொல்லங்கோடு போலீசார் அங்குச் சென்று விசாரித்ததில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உள்ள நபர் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ் என்பதை உறுதி செய்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் போலீஸுக்கு பயந்து கட்டுமானபணிகள் நடைபெறும் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சுரேஷ்

ரேஷன் அரிசியுடன் மாயமான லாரி குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் லாரி ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திவிட்டு வேறு எவரேனும் சுரேசை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

கொலையா, தற்கொலையா? - AI முன்னாள் ஊழியர் சுசீர் பாலாஜி மரணத்தில் நடந்தது என்ன? - பகீர் பின்னணி!

'உலகில் 'AI' நிறைய சாதனைகளையும், பெரும் சாகசங்களையும் செய்யும்' என்று பதின் வயதில் கனவு கண்ட இளைஞனின் உயிரை பறித்திருக்கிறது அவர் கனவு கண்ட அதே ஏ.ஐ.ஏ.ஐ மனிதக்குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று ஒரு... மேலும் பார்க்க

சென்னை: திருமணத்தை மீறிய நட்பு; காவல் நிலைய வாசலில் தீக்குளித்த டான்ஸர்

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ராணி (35) (பெயர் மாற்றம்). இவர், கிளப் ஒன்றில் டான்ஸராக இருந்து வருகிறார். இவருக்கும் வடபழனியைச் சேர்ந்த அறிவழகனுக்கும் (34) இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணமா... மேலும் பார்க்க

மும்மாநில எல்லையில் அத்துமீறும் கேரள வேட்டை கும்பல்; கூட்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தும் ஆர்வலர்கள்!

நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் வனத்தை உள்ளடக்கியிருக்கிறது. வன வளம் நிற... மேலும் பார்க்க

`6 ஆண்டுகள் பொறியியல் படிப்பில் தோல்வி' - படிப்பை விடச் சொன்னதால் பெற்றோரை கொலை செய்த மாணவர்

தங்களது குழந்தைகள் என்ன படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவு இருக்கும். ஆனால், பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெற்றோர் விரும்பும் படிப்பை படிக்காமல் தாங்கள் விரும்பும் படிப்பை... மேலும் பார்க்க

New Orleons Attack: புத்தாண்டு கொண்டாட்டத்தில் தாக்குதல்...15 பேர் உயிரிழப்பு! - என்ன நடந்தது?

அமெரிக்காவின் லூசியானாவில் அமைந்திருக்கிறது நியூ ஆர்லியன்ஸ் நகரம். அங்கே உள்ள பிரெஞ்ச் குவாட்ரஸ் பகுதியில் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு, புத்தாண்டு கொண்டாடுவதற்காக கூடியிருந்த கூட்டத்திற்குள் ஒருவர் பி... மேலும் பார்க்க

Uttar Pradesh: தாய் உட்பட 4 சகோதரிகளைக் கொன்ற அண்ணன்; வீடியோவில் தெரியவந்த அதிர்ச்சிப் பின்னணி!

உத்தரப்பிரதேசத்தில், ஒரு இளைஞர் லக்னோவில் ஒரு ஹோட்டலில் தன்னுடைய தாய் மற்றும் நான்கு சகோதரிகளைக் கொலைசெய்ததற்குப் பின்னால் இருக்கும் காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த கொலை நடந்த சில... மேலும் பார்க்க