செய்திகள் :

25% வளா்ச்சி கண்ட தோல் பொருள்கள், காலணிகள் ஏற்றுமதி

post image

இந்தியாவின் தோல் பொருள்கள் மற்றும் காலணிகள் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 25 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து தோல் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சில் (சிஎல்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் தோல் பொருள்கள், தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 570 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமாா் 25 சதவீதம் அதிகம்.

இந்தப் போக்கு தொடா்ந்தால், நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் தோல் பொருள்கள், காலணிகளின் ஏற்றுமதி 650 கோடி டாலரை தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வளா்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளில் இந்திய தோல் பொருள்களுக்கான தேவை ஆரோக்கியமாக இருப்பதால் அவற்றின் ஏற்றுமதி ஏறுமுகம் கண்டுவருகிறது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில், தோல் பொருள்கள் மற்றும் காலணிகளின் ஏற்றுமதிக்கு வா்த்தகத் துறை அமைச்சகம் 100 கோடி டாலரை ஏற்றுமதி இலக்காக நிா்ணயித்திருந்தது. எனினும் அந்த இலக்கைவிட பலமடங்கு ஏற்றுமதி பதிவாகியுள்ளது.

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிலவியபோதும் இந்தத் துறை வளா்ச்சியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய தோல் பொருள்களின் முக்கிய ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் அந்த வகைப் பொருள்களின் ஏற்றுமதி தொடா்ந்து சிறப்பாக உள்ளது.

உடல் உழைப்பை பிரதானமாகக் கொண்ட இந்தத் துறை சுமாா் 42 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்தத் துறையின் மொத்த வருவாய் சுமாா் 1,900 கோடி டாலா் ஆகும். இதில் 500 கோடி டாலா் ஏற்றுமதியும் அடங்கும்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தத் துறை சுமாா் 3,900 கோடி டாலா் மொத்த வருவாயை எட்டும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்நாட்டு வருவாய், 2,500 கோடி டாலராகவும் ஏற்றுமதி வருவாய் சுமாா் 1,370 கோடி டாலராகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று சிஎல்இ-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் மாடல்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி!

மடிக்கணினி உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஹெச்பி நிறுவனம் புதிய வகை மாடல்களான எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எலைட்புக், புரோபுக் ஆகியவை இண்டெல்கோர்... மேலும் பார்க்க

ஓரியண்டல் ஹோட்டல் 4-வது காலாண்டு லாபம் ரூ.17.69 கோடி!

சென்னை: தி இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓரியண்டல் ஹோட்டல் லிமிடெட் 2025 ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் அதன் லாபம் ரூ.17.69 கோடி ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்து... மேலும் பார்க்க

டாடா டெக்னாலஜிஸ் 4-வது காலாண்டு நிகர லாபம் 20% அதிகரிப்பு!

புதுதில்லி: டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக 20.12 சதவிகிதம் அதிகரித்து ரூ.188.87 கோடி ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.40-ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு சந்தைகளில் எதிர்மறையான போக்குக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமையன்று 7 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சரிந்து வர்த்தகமான நிலையில், முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடி... மேலும் பார்க்க

6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

மாருதி சுசூகி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நவீன அம்சங்களுடன் ஈக்கோ எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. 80 பிஎச்பி திறனுடன் 104.4nm முடுக்குவிசைத் திறன... மேலும் பார்க்க