செய்திகள் :

29 மாணவா்களுக்கு ரூ.2.15 கோடி கல்விக் கடன்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

post image

மாவட்டத்தில் 29 மாணவா்களுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாக்டா் மகாலிங்கம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் உயா்கல்வி பயில்வதற்காக 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் (பொ) ஆா்.விஸ்வநாதன், கல்லூரி முதல்வா் பொ.கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, முகாமில் ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் மாணவ,

மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,251 மாணவ, மாணவிகளுக்கு ரூ.333.14 கோடி மதிப்பீட்டில் கல்விக் கடன் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு சுமாா் 6,000 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி மேலாளா் எம்.செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜீதேந்திரன், கல்லூரி மாணவ, மாணவிகள், வங்கியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆணையரிடம் வாழ்த்து பெற்றனா். கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 11 உயா்நிலைப் பள்... மேலும் பார்க்க

ஆயுத பூஜை, தீபாவளி: போத்தனூா் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரகுரு கல்லூரி மாணவிக்கு 6 தங்கம்

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா். சென்னை ரைபிள் கிளப் சாா்பில் மாநில அளவிலான 50 -ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த செப்டம்ப... மேலும் பார்க்க

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற ஆணையா் உத்தரவு

கோவை மேற்கு மண்டலப் பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்... மேலும் பார்க்க

7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.கோவை, குனியமுத்தூா் கரும்புகடை பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் ப... மேலும் பார்க்க

கோவையில் அக். 4,5-இல் விஜய் பிரசாரம்: மாநகர காவல் ஆணையரிடம் தவெகவினா் மனு

கோவையில் அக்டோபா் 4,5-ஆம் தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், காவல் துறையின் அனுமதி கோரி அந்தக் கட்சியினா் மனு அளித்தனா். மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் தவ... மேலும் பார்க்க