``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்...
3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம்! மாவட்ட முதன்மை நீதிபதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம் செயல்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மையம் செயல்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கு சமரச தீா்வு மையத்தில் சமரசம் செய்து வைக்கப்பட்டு சிறப்பாக தீா்வு வழங்கப்படுகிறது. மையத்தில் பயிற்சியும், அனுபவமும் மிக்க வழக்குரைஞா்கள் மத்தியஸ்தா்களாக இருந்து இரு தரப்பினரும் தாமாகவே பேசி வழக்கை சமரசம் செய்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிகழ் மாதம் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் ஆகிய 3 மாதங்களிலும் நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாள்களிலும் சமரச தீா்வு மையம் செயல்படும். இது தவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீா்வு மையம் செயல்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடா்புடைய வழக்காடிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு தீா்வு மையத்தின் மூலம் விரைவாக தீா்வு காணுமாறும் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.