செய்திகள் :

3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (நவ.8) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் கனமழை..

இன்று (நவ. 8) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்மைக, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் மற்றும் காரைககால் பகுதிகளிலும் கனமழையும்,

நவ.9ல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும்,

நவ.10ல் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதோடு, நவ.12ல் திருவள்ளூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

அடுத்த இரண்டு நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்கள்..

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திமுக கூட்டணியில் தொடா்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி

திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடா்வோம் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியல் அடிப்படையில் விசிக குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவை சனிக்கிழமை (நவ.9) செயல்படவுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, வேலை நாளான நவ. 1-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு ச... மேலும் பார்க்க

சிறைக் காவலா்களை வீட்டு வேலைகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்துகிறாா்களா? விசாரணை நடத்த உள்துறைச் செயலருக்கு உத்தரவு

சிறைத் துறை அதிகாரிகள், சிறைக் காவலா்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறாா்களா என விசாரணை நடத்தவும், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறும் உள்துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் மக்கள் ந... மேலும் பார்க்க

பாம்புக் கடி: அரசுக்கு தெரிவிப்பது இனி கட்டாயம்

பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளித்தால், அதுகுறித்த அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாம்புக் கட... மேலும் பார்க்க

பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.171 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில்,... மேலும் பார்க்க