செய்திகள் :

3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

post image

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ. 26) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கடந்த 6 மணி நேரத்தில் வங்கக்கடலில் மேற்கு - வட மேற்கு திசையில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, தென் மேற்கு வங்கக்கடலில் திரிகோணமலைக்கு தெற்கு - தென்கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு - தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 860 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 960 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்(நவ. 26) ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரமடையும்.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ. 26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • மயிலாடுதுறை,

  • நாகப்பட்டினம்,

  • திருவாரூர்,

  • காரைக்கால் மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • விழுப்புரம்

  • கடலூர்

  • அரியலூர்

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • சிவகங்கை

  • புதுச்சேரி பகுதிகளில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பள்ளி பலகையில் பெயா் மாற்றம்: களம் கண்டோா்க்கு முதல்வா் பாராட்டு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்துக... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி-இல் விலக்கு தேவை உள்துறை அமைச்சருக்கு கடிதம்

சென்னை: கூட்டுறவு சங்க தயாரிப்புகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க வேண்டும் என்று உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க

மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்: சென்னை ஐஐடி-இல் தொடக்கம்

சென்னை: மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம் சென்னை ஐஐடி-இல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ஐஐடி பிரவா்த்தக் டெக்னாலஜீஸ் அறக்கட... மேலும் பார்க்க

தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் வேதாந்தாவின் இரு திட்டங்கள், ஒரு ஓஎன்ஜிசி திட்டம் நிலுவை: மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழக டெல்டா மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனத்தின் இரண்டு திட்டங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) ஒரு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ... மேலும் பார்க்க

ராஜேந்திர பாலாஜி மீதான ஆவின் மோசடி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலவர அறிக்கை தாக்கல்

நமது நிருபா் புது தில்லி: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் நிலவர அறிக்கையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

புது தில்லி: மருத்துவா் ராமதாஸை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ள... மேலும் பார்க்க