சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சு...
'35 சவரன் நகைகளை இரவல் கொடுத்து இழந்த பெண்' - கணவன் கேட்டதால் தீக்குளித்த அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள செண்பகத்தறை பகுதியை சேர்ந்தவர் வடிவேல். வெளிநாட்டில் வேலை செய்துவந்தார். இவருக்கும் ஊற்றுக்குழி பகுதியை சேர்ந்த ஶ்ரீஜா(37) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வடிவேல் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தை தனது மனைவிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். மேலும், சுமார் 35 சவரன் தங்க நகைகளும் மனைவிக்கு வாங்கி கொடுத்துள்ளார் வடிவேல்.
உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்க்காக வடிவேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். திருமணத்துக்கு செல்வதற்காக நகைகளை எடுத்து தயாராக வைக்கும்படி மனைவி ஸ்ரீஜாவிடம் நேற்று முன்தினம் இரவு வடிவேல் கூறியுள்ளார். அப்போது நகைகள் ஒன்றும் தன்னிடம் இல்லை எனவும், தனது சகோதரனுக்கு இரவலாகக் கொடுத்தாகவும் கூறியுள்ளார் ஸ்ரீஜா.
இதனால் தம்பியிடம் கொடுத்த நகைகளை வாங்கி வைக்கும்படி வடிவேல் கூறியுள்ளார். காலையில் தம்பி நகைகளை கொண்டு வந்து தருவதாக கூறி உள்ளதாக ஸ்ரீஜா கணவரிடம் தெரிவித்தார். இதைனையடுத்து இருவரும் இரவு தூங்கி உள்ளனர்.

நேற்று அதிகாலை கணவன் மற்றும் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன்பே எழுந்த ஶ்ரீஜா வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் அலறித்துடித்தார் ஸ்ரீஜா. ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவன் மற்றும் குழந்தைகள் வெளியே ஓடி சென்று தீயை அணைத்தனர். அதற்குள் உடல் முழுவதும் கருகி சுருண்டு விழுந்து இறந்துள்ளார் ஸ்ரீஜா. இது குறித்து வடிவேலு நித்திரவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து போலீஸார் அங்கு சென்று ஶ்ரீஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் விசாரணை

மேலும் இது சம்பந்தமாக போலீஸார் ஸ்ரீஜாவின் சகோதரரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் தனக்கு 50,000 ரூபாய் பணம் மட்டுமே கடனாக கொடுத்ததாகவும், நகைகள் எதுவும் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீஜா நகைகளை வேறுயாருக்கேனும் கடனாக கொடுத்ததில் அவர்கள் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றினார்களா அல்லது வேறு எங்காவது முதலீடு செய்து நகைகளை இழந்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.