Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினா...
35 வயதில் சாதனை படைத்த ஸ்காட் போலண்ட்!
சிட்னி டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட் தனது 50 ஆவது விக்கெட்டினை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்தியாவின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, நிதீஷ்குமார் ஆகியோரது விக்கெட்டினை எடுத்து போலண்ட் அசத்தினார்.
அதிலும் கடந்த டெஸ்ட்டில் சதமடித்த நிதீஷ்குமார் ரெட்டியை கோல்டன் டக்கவுட் ஆக்கி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகவே ஸ்காட் போலண்டுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பிங்க் பந்தில் விளையாடிய போலண்ட் மீண்டும் அடுத்த டெஸ்ட்டில் ஹேசில்வுட் விளையாடியதால் நீக்கப்பட்டார். பின்னர் ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறவே இவருக்கு இடம் உறுதியானது.
கிடைக்கும் வாய்புகளில் எல்லாம் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார் போலண்ட். நடப்பு பார்டர் - கவாஸ்கர் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார்.
3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ள போலண்ட் தனது சிறந்த பந்துவீச்சாக 4/31 எடுத்துள்ளார்.
தனது 13 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 6/7 இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிராக மட்டும் 5 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
35 ஆண்டுகள் 267 நாள்களில் 50 விக்கெட்டினை எடுத்துள்ளார். இதற்கு முன்பாக நியூசி. வீரர் பெவேன் காங்டன் 37 ஆண்டு 10 நாள்களில் (1975இல்) 50 டெஸ்ட் விக்கெட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.