ஒரே துணை; ஒரேயொரு முட்டை; சடலங்களே உணவு... கொத்துக் கொத்தாக இறந்துபோன பாறு கழுகு...
3வது முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்பும்! தலைமை பொறியாளகுமார்
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று (டிச. 31) மாலை நிரம்பும் என திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அணை நீர்மட்டம் இன்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
அணையின் நீர்மட்டம் 119.87அடியிலிருந்து 119.97அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.42 டிஎம்சியாக உள்ளது. (அணையின் மொத்த நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகும்)
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதன் முறையாக நிரம்பியது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிரம்பியது.
இன்று மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் இன்று காலை நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார் உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோருடன் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அணையின் வலது கரை, இடது கரை ஆய்வு சுரங்க பகுதி ஆகியவற்றை பார்வைத்தார். மேட்டூர் அணை இடது கரை அமைந்துள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை திருச்சி மன்டல தளவாய் பொறியாளர் தயாளகுமார் பேசும் பொழுது
''இன்று மாலைக்குள் மேட்டூர் அணை நிரம்பும். நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. உபரிநீர் திட்டத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
டெல்டா பாசனத்திற்கு தேவையை பொறுத்து தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்றார்.
இதையும் படிக்க | வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடர் அல்ல; அதிதீவிர பாதிப்புதான்: மத்திய அரசு