செய்திகள் :

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம் – தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரம் – தெற்கு ஓரிசா பகுதிகளை கடக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஆகஸ்ட் 13 - வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருவள்ளூர், ராணிபேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 14 - 19 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (13-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

13-08-202 தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்!

சென்னை: கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கராத்தே பயிற்சி மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ச... மேலும் பார்க்க

பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்: இபிஎஸ்

திருப்பத்தூர்: மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க