செய்திகள் :

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

post image

ஆர். மோகன்ராம்

சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.

சிவகங்கை நகரில் நேரு பஜாரில் 100 ஆண்டுகள் பழமையான வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் இஸ்லாமியர்கள் அதிக வசிக்கும் பகுதியில் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் தினமும் நோன்பு கஞ்சி சமைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு இஸ்லாமியர் களுக்கு மட்டுமின்றி நேரு பஜார் பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவர்கள் உள்பட தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நோன்பு கஞ்சியை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் சமைத்து வருகிறார். இப்பணியில் அவரது உறவினர்கள் உள்பட கிராமத்தை சேர்ந்த பெண்களும் தினமும் சிவகங்கைக்கு வந்து இந்த பணியில் உதவியாக இருந்து வருகின்றனர். காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய இவர்களின் சமையல் பணி மதியம் 12-30 மணிக்கு நிறைவடையும். பின்னர் மதியம் 1 மணியிலிருந்து இந்த நோன்பு கஞ்சி மக்களுக்கு சுடச்சுட விநியோகம் செய்கின்றனர்..

தினசரி 50 படி அரிசியில் இந்த நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வரை இந்த பள்ளிவாசலை சேர்ந்த இஸ்லாமியர் கள் செலவிடுகின்றனர். மற்ற பள்ளிவாசல்களில் இல்லாத வகையில் இங்கு கமகமக்கும் நோன்பு கஞ்சியுடன் வழங்கப்படும் கத்தரிக்காய் சட்னி மிகவும் பிரபலமானது. லட்சுமிஅம்மாள் தயார் செய்யும் இந்த நோன்பு கஞ்சி மற்றும் கத்தரிக்காய் சட்னியை ரமலான் மாதத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய நூற்றுக்கணக்கானோர் அந்தப் பகுதியில் உள்ளனர்.

இந்த நோன்பு கஞ்சி, கத்தரிக்காய் சட்னி ரமலான் மாதத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இதை ருசிப்பதற்காக வெளிநாடுகளில், வெளியூர்களில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு வைப்பதற்காக சிவகங்கைக்கு வரும் நிலையில், லட்சுமி அம்மாள் கைப்பக்குவத்தில் தயார் செய்யும் இந்த நோன்பு கஞ்சியை விரும்பி சாப்பிடுவது கூடுதல்சிறப்பு.

இது குறித்து லட்சுமி அம்மாள் கூறுகையில், தொடக்காலத்தில் 5 ரூபாய் சம்பளத்திற்கு இந்த பள்ளிவாசலில் முதன் முதலில் சமைக்க வந்தேன். 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த பணியினை எனது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுடன் சேர்ந்து செய்கிறோம். இந்த ஒரு மாத காலம் இந்தப் பணியைச் செய்வதால் கிடைக்கும் சம்பளத்தைவிட எங்களுக்கு கிடைக்கும் மன நிறைவு அதிகம். ஒரே குடும்பம் போல் இந்த பள்ளிவாசலில் நாங்கள் தங்கி இந்த பணியை செய்து வருகிறோம் என்றார்.

இது குறித்து ஜமாஅத் தலைவர் கூறியதாவது: லட்சுமி அம்மாள் மற்றும் அவருடன் சமைப்பவர்கள் அனைவருக்கும் சம்பளம் பிரதான நோக்கமாக இல்லாமல், ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பவர்களுக்கு இந்த நோன்பு கஞ்சியை ருசியான முறையில் தயார் செய்து கொடுப்பதையே முக்கியப் பணியாகக் கருதுகின்றனர். பல ஆண்டுகளாக ஒரே குடும்பம் போல் இங்கு இந்தப் பணியை செய்து வருகின்றனர் என்றார் அவர்.

(பட விளக்கம்- சிவகங்கை நேரு பஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள லட்சுமி அம்மாள்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க