40 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
பெரியகுளத்தில் தடைசெய்யப்பட்ட 40.5 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவரின் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அங்கு தடைசெய்யப்பட்ட 40 கிலோ 500 கிராம் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.