செய்திகள் :

'40 முதல் 50 % சொத்துகள் அரசிடம் செல்லும் அபாயம்' - வக்பு வாரிய மசோதா குறித்து ஆ.ராசா சொல்வதென்ன?

post image
வக்பு வாரிய மசோதவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற குழுவின் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்புதலுக்கு ஆ.ராசா உள்ளிட்ட 10 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதுதொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா செய்தியாளர்களைச் சந்தித்து பேசி இருக்கிறார். “ 655 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை ஒரே நாளில் படித்து எப்படி விவாதிக்க முடியும். அது எப்படி சாத்தியமாகும். வரைவு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 

ஆ.ராசா
ஆ.ராசா

பா.ஜ.க. கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அளித்த அனைத்து திருத்தங்களும் ஏற்கப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவந்த பிரிவுகளை திருட்டுத்தனமாக நீக்கி இருக்கின்றனர். பெரும்பான்மை அடிப்படையில்  வரைவு அறிக்கைக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 40 முதல் 50 சதவிகிதம் சொத்துக்கள் அரசிடம் செல்லும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது . வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக  கட்டாயம் நாங்கள் வழக்கு தொடருவோம். வரைவு அறிக்கை தொடர்பான எங்கள் எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் பதிவு செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார். 

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி : `சாட்சியளிக்க வராமல் புறக்கணித்த விவரங்கள்' - ஆதாரத்தோடு ED வழங்கிய புதிய மனு

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை ப... மேலும் பார்க்க

டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன ... மேலும் பார்க்க