செய்திகள் :

`46 வருடங்கள் சினிமாத்துறையில் பயணித்திருக்கிறேன்; ஆனால்..!' - ராதிகா சரத்குமார் | Vikatan Awards

post image

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இதில் 2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வெப்சீரிஸ்க்கான (தலைமைச் செயலகம்) விருதை ராதிகா, வசந்த பாலன் இருவரும் பெற்றனர். அவருக்கு இந்த விருதினை இயக்குநர் விக்ரமன் வழங்கினார்.

ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்
ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்

விருதைப் பெற்றுக்கொண்ட ராதிகா, "இந்த விருது விழாவுக்கு வந்தபோது என்னுடைய கணவர், `மைக்கைப் பிடித்து தேவையில்லாமல் எதுவும் பேசிவிடாதே' என்று கூறினார். சினிமாத்துறையில் நான் நிறைய பரிணாமங்களைப் பார்த்துவிட்டேன். கிட்டத்தட்ட 46 வருடங்கள் சினிமாத்துறையில் பயணித்திருக்கிறேன். திரைப்படங்களில்கூட நடித்துவிடலாம் ஆனால், வெப் சீரீஸில் நடிப்பது ரொம்பக் கடினம். ஒவ்வொருவருக்கும் கதையை விவரித்து, பொறுமையாக அதைச் செய்ய வேண்டும்" என்றார்.

விருதைப் பெற்றுக்கொண்ட வசந்தபாலன் பேசுகையில், ``அரசியல் வெப் சீரீஸ் இது. நிறைய பொலிட்டிக்கல் நபர்களைச் சந்தித்து, நிறைய படித்த பிறகுதான் இந்த வெப் சீரீஸை எடுத்தேன். முதல் ஐந்து நாள்கள் பயமாக இருந்தது. பொதுவாக வெப் சீரீஸில் நிறைய வன்முறைகள் இருக்கும். என்னுடைய இந்த வெப் சீரீஸில் வன்முறைகள் இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.

ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்
ஆனந்த விகடன் சினிமா விருது விழாவில்

ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் போன்றவை இந்த வெப் சீரீஸில் இருக்கக் கூடாது என்று நினைத்துத்தான் இதை எடுத்தேன். 'அங்காடி தெரு'வுக்குப் பிறகு இந்த வெப் சீரீஸுக்காக விகடன் விருது வாங்கியதில் மகிழ்ச்சி. இன்னும் 20 வருடங்கள் பயணிப்பதற்கு இந்த விருது உத்வேகம் அளிக்கும்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokesh Kanagaraj: "மிடில் கிளாஸ் வாழ்க்கை கனக்ட் ஆனது" - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குநர்!

காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்திய... மேலும் பார்க்க

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.... மேலும் பார்க்க

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க