5 நிறுவனங்களின் சொத்துக்களை ஏலம் விடும் செபி!
புதுதில்லி: முதலீட்டாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வசூலித்த பணத்தை மீட்பதற்காக, பிஷால் குழுமம் மற்றும் சுமங்கல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் 28 சொத்துகளை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஏலம் விடவுள்ளது.
இந்த சொத்துக்கள் ரூ.28.66 கோடிக்கு இருப்பு விலைக்கு ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரவி கிரண் ரியாலிட்டி, மங்களம் அக்ரோ மற்றும் புருசத்தம் இன்ஃபோடெக் ஆகிய நிறுவனங்களின் சொத்துக்கள் அடங்கும்.
இதையும் படிக்க: களத்தில் காளைகள்: நிஃப்டி 165 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 499 புள்ளிகளுடன் உயர்வு!
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிட கட்டமைப்புகளுடன் கூடிய நிலம் ஆகியவை ஏலத்தில் விடப்படும்.
இந்த சொத்துக்கள் ரூ.28.66 கோடி இருப்பு விலையில் ஏலம் விடப்படும் என்று இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான - செபி டிசம்பர் 19 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஐந்து நிறுவனங்களுக்கும், அவற்றின் இயக்குநர்களுக்கு எதிரான மீட்பு நடவடிக்கைகளில், சொத்துக்களை விற்பனை செய்வதற்கான ஏலங்களை சந்தை கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது செபி.
இதையும் படிக்க: ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.11-ஆக முடிவு!
முதலீட்டாளர்களின் பணத்தை மீட்கும் செபியின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து விற்பனையில் உதவ அட்ராய்ட் டெக்னிக்கல் சர்வீசஸ் நிறுவனத்தை ஒழுங்குமுறை ஆணையம் நியமித்துள்ளது.
இந்த ஏலம் ஜனவரி 27, 2025 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைனில் நடத்தப்படும் என்று செபி தெரிவித்துள்ளது.