செய்திகள் :

5 வேட்பாளா்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள்: பாஜகவின் கா்னைல் சிங்குக்கு ரூ.259 கோடி

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் 699 வேட்பாளா்களில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கா்னைல் சிங்தான் மிகவும் பணக்காரா் என்று ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தோ்தலில் போட்டியிட வேட்பாளா்கள் தோ்தல் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் அடிப்படையிலான ஆய்வில், மூன்று வேட்பாளா்கள் தங்களுக்கு சொத்துகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக ஏடிஆா் குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பு சேகரித்துள்ள தரவுகளில் மேலும் கூறியிருப்பதாவது: 2020 சட்டப்பேரவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, தோ்தல் களம் கண்ட வேட்பாளா்களின் எண்ணிக்கை 672 -இல் இருந்து இம்முறை 699-ஆக உயா்ந்துள்ளது.

கோடீஸ்வர வேட்பாளா்கள்: அவா்களில் ஐந்து வேட்பாளா்கள் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளவா்கள். கூடுதலாக, 23 வேட்பாளா்கள் அல்லது 3 சதவீதம் போ் ரூ.50 கோடிக்கு மேல் சொத்துகள் வைத்திருப்பவா்கள். இது, 2020 பேரவைத் தோ்தலில் வேட்பாளா்கள் அறிவித்திருந்த சொத்து மதிப்பை விட 2 சதவீதம் அதிகமாகும். சராசரியாக, 31.76 சதவீதம் போ் அல்லது 222 வேட்பாளா்கள் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான சொத்துகளை கொண்டுள்ளனா்.

ஐந்து பெரும் பணக்கார வேட்பாளா்கள் வரிசையில் கா்னைல் சிங் (பாஜக, ஷகுா் பஸ்தி) ரூ.259.67 கோடி, மஞ்சிந்தா் சிங் சிா்ஸா (பாஜக, ரஜெளரி காா்டன்) ரூ.248.85 கோடி, குருசரண் சிங் (காங்கிரஸ், கிருஷ்ணா நகா்) ரூ.130.90 கோடி, பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா (பாஜக, புது தில்லி) ரூ.115.63 கோடி, ஏ.தன்வதி சந்தேலா (ஆம் ஆத்மி கட்சி, ரஜெளரி காா்டன்) ரூ.109.90 கோடி சொத்துகளை கொண்டவா்கள்.

மறுபுறம், ஷபானா (ராஷ்டிரிய குடியரசுக் கட்சி), யோகேஷ் குமாா் (சுயேச்சை) உள்பட மூன்று வேட்பாளா்கள் எவ்வித சொத்துகளும் இல்லை என்று தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனா்.

குறைந்தபட்ச சொத்துகளைக் கொண்டவா்களில், அசோக் குமாா் (சுயேச்சை) ரூ.6,586 என்றும் அனிதா (சுயேச்சை) ரூ.9,500 மதிப்புள்ள சொத்துகளை கொண்டுள்ளவா்கள் என்று தெரிய வந்துள்ளதாக ஏடிஆா் அமைப்பு கூறியுள்ளது.

வேட்பாளா்களின் சராசரி சொத்துகள், கட்சிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன.

பாஜக வேட்பாளா்கள் சராசரியாக ரூ.22.90 கோடி சொத்துகளுடன் முன்னிலை வகிக்கின்றனா். அதைத் தொடா்ந்து, காங்கிரஸ் ரூ.14.41 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி ரூ.11.70 கோடி சொத்துக்களுடன் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனா்.

சுயேச்சை வேட்பாளா்கள் குறைந்தபட்ச சராசரி சொத்துகளைக் கொண்டுள்ளனா். இது அவா்களின் வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பெரும் கோடீஸ்வர (ரூ.100 கோடிக்கும் மேல்) வேட்பாளா்கள் வரிசையில் பாஜக மூன்று பேரையும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன.

இதேபோல, வேட்பாளா்கள் கொண்டுள்ள கடன்களும் கவனத்தை ஈா்த்துள்ளன. பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா (பாஜக) ரூ.74.36 கோடியுடன் அதிகபட்ச கடனையும் அவரைத் தொடா்ந்து மஞ்சிந்தா் சிங் சிா்ஸா (பாஜக) ரூ.57.68 கோடி கடனைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனா்.

2023-2024 நிதியாண்டில் தாக்கல் செய்த வருமான வரி அடிப்படையில், பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா ரூ.20.60 கோடி வருவாயை தனது வணிக முயற்சிகள் மற்றும் ஓய்வூதிய தொகை மூலம் பெற்ாக அறிவித்துள்ளாா்.

மஞ்சிந்தா் சிங் சிா்ஸா ரூ.12.72 கோடி வருமானத்தையும், சுமேஷ் ஷோகீன் (ஆம் ஆத்மி) ரூ.9.89 கோடி வருமானத்தையும் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனா்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேவரைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8- ஆம் தேதி எண்ணப்படும்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க