5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்; அயர்லாந்து வீரரின் அசத்தலான சாதனை!
ஐந்து பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற அசத்தலான சாதனையை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் படைத்துள்ளார்.
அயர்லாந்தில் மாகாணங்களுக்கு இடையேயான டி20 டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முன்ஸ்டர் ரெட்ஸ் அணிக்காக விளையாடிய கர்டிஸ் கேம்பர், தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் கிரிக்கெட்டில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை தொடர்ச்சியாக ஒருவர் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு மகளிருக்கான உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் ஈகிள்ஸ் வுமன் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே வீராங்கனை கெலிஸ் தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கர்டிஸ் கேம்பர் இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த அரிய சாதனையை படைத்தார். அவர் வீசிய 12-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் விக்கெட் கைப்பற்றினார். அதற்கு அடுத்த பந்திலும் விக்கெட்டினை கைப்பற்றினார்.
— Cricket Ireland (@cricketireland) July 10, 2025
அதன் பின், அவர் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், இரண்டு ஓவர்களில் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவர் சாதனை படைத்தார்.
The Irish player has set an incredible record by becoming the first player to take 5 wickets in five balls.
இதையும் படிக்க: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு ஆஸி. டாப் ஆர்டர் தயாரா? ஸ்டூவர்ட் பிராட் கேள்வி!