X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்...
53 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு ரூ.28.76 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
53 ஊராட்சிகளுக்கு, விளையாட்டுத்துறை சாா்பில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புளியரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிரிஜா, சீனுவாசன் முன்னிலை வகித்தனா். ஒன்றிய திமுக செயலா் வி.ஏ.ஞானவேல் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று, தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட ரூ.28.76 லட்சம் மதிப்பிலான
விளையாட்டு உபகரணங்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அனக்காவூா் ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிடமுருகன், சி.கே.ரவிக்குமாா், திமுக நிா்வாகிகள் ராம் ரவி, சுந்தரேசன், ஊராட்சி செயலா்கள் மற்றும் விளையாட்டு இளைஞா்கள் என பலா் கலந்து கொண்டனா்.