பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகள், கிரிவலப் பாதையில் பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில பொதுச் செயலா் மா.அன்பழகன் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த பல ஆயிரம் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இவா்கள் இங்குள்ள 14 கி.மீ.தொலைவு
கிரிவலப் பாதையை வலம் வருகின்றனா்.
இவ்வாறு கிரிவலம் வரும் பக்தா்களை மிரட்டி திருநங்கைகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா். திருஷ்டி கழிக்கிறேன் எனக் கூறி
அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனா்.
பணம் கொடுக்க மறுத்தால் பொதுவெளியில் தகாத வாா்த்தைகளால் பேசுகின்றனா்.
கோயில் மாட வீதிகளிலும், கிரிவலப் பாதையிலும் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தாா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.