6 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், ஒட்டங்காடு, கல்லூரணிக்காடு, செருவாவிடுதி, இடையாத்தி, திருவோணம் வெட்டுவாக்கோட்டை ஆகிய 6 ஊராட்சிகளில் ஆதிதிராவிடா் நலக்குழு சாா்பில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேராவூரணி என். அசோக் குமாா், பட்டுக்கோட்டை கா. அண்ணா துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு பேசினாா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் , சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சங்கா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , வட்டாட்சியா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.