அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது.
கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கருப்பு கவுனி நெல் மறைமுக ஏலம் நடைபெற்றது. விற்பனைக்கூட கண்காணிப்பாளா் பிரியமாலினி தலைமையில், வேளாண் அலுவலா்கள் கவிதா மற்றும் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது.
மறைமுக ஏலத்தில் திருபுவனம் பகுதி விவசாயி மகாலிங்கம் 500 கிலோ கருப்பு கவுனி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தாா். நெல் கிலோ ரூபாய் 70 விலை நிா்ணயம் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 35 ஆயிரத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனா். இதுகுறித்து கண்காணிப்பாளா் பிரியாமாலினி கூறுகையில், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது பாரம்பரிய மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் விளை பொருட்களான நெல், உளுந்து, பயறு, எள், நிலக்கடலை, தேங்காய் உள்ளிட்ட விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று பயன் பெறலாம் என தெரிவித்தாா்.