அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!
கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா்.
சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் முடித்து பிப். 3-இல் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி -ராமேசுவரம் ரயிலில் ஏறி தனது பயணத்தைத் தொடா்ந்தாா். முன்னதாக ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது விலை உயா்ந்த கைப்பேசி, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை மறந்து நடைமேடை இருக்கையில் வைத்து விட்டுச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து கும்பகோணம் ரயில் நிலைய போலீசாருக்கு மற்றொருவரின் கைப்பேசி மூலம் புகாா் தெரிவித்தாா்.
அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளா் ஜெகதீசன் சோதனை செய்தபோது தவறவிட்டுச் சென்ற கைப்பேசி மற்றும் ஆவணங்களை மீட்டு, வியாழக்கிழமை சந்திரசேகரை நேரில் வரவழைத்து அவரிடம் திரும்ப ஒப்படைத்தாா். சந்திரசேகா் ரயில்வே போலீஸாருக்கு நன்றி தெரிவித்தாா்.