6 நாள்களுக்கு வறண்ட வானிலை
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (பிப்.12) முதல் பிப்.17 வறண்ட வானிலையே நிலவும்.
காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.