செய்திகள் :

6 மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

புழலில் அமைந்துள்ள, நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டா் திறன்கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதானக் குழாய்களில், நீா் அளவீடு கருவிகளை பொருத்துவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளன.

இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, திரு.வி.க. நகா், அம்பத்தூா், அண்ணா நகா் ஆகிய மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். மேலும், அவசர தேவைகளுக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக்கொள்ளலாம்.

குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.

மேலும், தகவல்களுக்கு 044-4567 4567 என்னும் தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் கிடந்த ‘ஏகே-47’ ரக துப்பாக்கி தோட்டாக்கள்: மத்திய பாதுகாப்புப் படை வீரரிடம் ஒப்படைப்பு

சென்னை அருகே மணப்பாக்கத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை ஏகே-47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த தோட்டாக்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, ஆளுநா் மாளிகை... மேலும் பார்க்க

சென்னையில் கடும் பனி மூட்டம்: 40 விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்கிழமை காலை முதல் சாலையில் வாகனங... மேலும் பார்க்க

வேளச்சேரி மயானம் இன்றுமுதல் இயங்காது

வேளச்சேரி மயானத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புதன்கிழமை (பிப். 5) முதல் தற்காலிகமாக இந்த மயானம் செயல்படாது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் ரீல்ஸ்: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

ஓடும் பேருந்தில் ரீல்ஸ் விடியோ எடுத்த ஒப்பந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். கோயம்பேடு - கிளாம்பாக்கம் இடையே இயக்கப்படும் ‘70 வி’ வழித்தட எண் கொண்ட பேருந்தில், ஒப்பந்தப் பண... மேலும் பார்க்க

இசை நிகழ்ச்சி: நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன்கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் ப... மேலும் பார்க்க

புற்றுநோய் மரபணு ஆராய்ச்சி: இராமச்சந்திரா கல்வி நிறுவனம் ஒப்பந்தம்

புற்றுநோய் பாதிப்புக்கான மரபணு சாா்ந்த துல்லிய சிகிச்சை தொடா்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் வகையில், ஹைதராபாதில் உள்ள நியூக்ளியோ இன்ஃபா்மேடிக்ஸ் நிறுவனத்துடன், போரூா் ஸ்ரீ இரா... மேலும் பார்க்க